அக்னி எல்லா பொருள்களையும் உண்டதால் ஏற்பட்ட தோஷத்தைப் போக்குவதற்கு இந்தத் தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டார். சிவபெருமான் சந்திரசேகரராக காட்சி தந்து அக்னி பகவானின் தோஷத்தைப் போக்கியருளினார்.
மூலவர் 'வர்த்தமானேஸ்வரர்' பெரிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகை 'மனோன்மணி' என்னும் திருநாமத்துடன் காட்சி தருகின்றாள். அக்னீஸ்வரர் சன்னதிக்கு வடக்குப் பக்க வழியாகச் சென்றால் அருகிலேயே அமைந்துள்ளது.
வர்த்தமானேஸ்வர பெருமானுக்கு மலர் மாலைக் கட்டிக் கொடுக்கும் தொண்டு செய்து முக்தி அடைந்தார் முருக நாயனார். மூலவருக்கு எதிரில் முருக நாயனாரும், சண்டேஸ்வரரும் உள்ளனர்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். |